English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joshua Chapters

Joshua 15 Verses

1 வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது.
2 அதன் தென் எல்லை உப்புக்கடலில் [*உப்புக்கடலில் அல்லது சவக்கடல் என்று பொருள்.] தென் மூலையிலுள்ள முனையிலிருந்து,
3 அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது.
4 பின்பு அஸ்மோன் பக்கமாகச்சென்று, எகிப்தின் நதியுடன் இணைந்து மத்திய தரைக்கடலில் முடிந்தது. இதுவே யூதா கோத்திரத்தாரின் தென் எல்லை.
5 யோர்தான் நதியின் ஆரம்பம் வரை உள்ள உப்புக்கடல் அதன் கிழக்கு எல்லையாகும். வட எல்லை யோர்தான் முகத்துவாரத்திலுள்ள கடலின் முனையிலிருந்து ஆரம்பமாகி,
6 அங்கிருந்து பெத் ஓக்லாவுக்குச் சென்று பின் பெத் அரபாவின் வடக்காகக் கடந்து ரூபனின் மகனாகிய போகனின் கல் இருந்த இடம்வரை சென்றது.
7 அந்த எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குச் சென்றது. வடக்கே திரும்பி கணவாய்க்குத் தெற்கிலுள்ள அதும்மீமின் மேட்டுக்கு எதிரேயுள்ள கில்காலுக்குச் சென்றது. அங்கிருந்து எல்லையானது என்சேமேசின் நீரூற்றுகளுக்குச் சென்று என்ரொகேல் நீரூற்றுவரை வந்தது.
8 பின் எல்லையானது பென் இன்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் பட்டணத்தின் தென்மலைச்சரிவை அதாவது எருசலேமை அடைந்தது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கிற்கு மேற்கே மலையின் உச்சிக்கு ஏறியது. இந்த மலை ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடக்குமுனையில் இருந்தது.
9 அந்த மலையுச்சியிலிருந்து எல்லையானது, நெப்தோ நீரூற்றை நோக்கிச்சென்று, பின்னர் எப்ரோன் மலையிலுள்ள நகரங்களின் வழியாகச் சென்று அங்கிருந்த கீரியாத்யாரீமாகிய பாலாவை நோக்கிசென்றது.
10 பாலாவிலிருந்து எல்லையானது, மேற்கே வளைந்து சேயீர் மலையை நோக்கித் திரும்பி யெயாரீம் மலையில் வடக்குசரிவு அதாவது கெசலோக் ஒரமாகத் தொடர்ந்துசென்றது. அங்கிருந்து பெத்ஷிமேஷைக் கடந்து திம்னாவரை சென்றது.
11 அது எக்ரோனின் வடக்கு மலைச்சரிவை நோக்கிச்சென்று, சிக்ரோனை நோக்கி திரும்பிச்சென்று, பாலா மலையைக்கடந்து யாப்னியேலை அடைந்தது. அதன் எல்லை மத்திய தரைக்கடலில் முடிந்தது.
12 தேசத்தின் மேற்கு எல்லை, மத்திய தரைக்கடலின் கரையோரமாகும். மேலே கூறப்பட்டவை யூதாவின் கோத்திரத்திற்கு அதன் வம்சங்களுக்கேற்ப வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாகும்.
13 யோசுவாவிற்கு யெகோவா கட்டளையிட்டபடியே அவன் யூதா தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகனாகிய காலேப்புக்கு கொடுத்தான். அது கீரியாத் அர்பா அதாவது எப்ரோன் பிரதேசம் ஆகும். அர்பா என்பவன் ஏனாக்கின் முற்பிதா.
14 காலேப் மூன்று ஏனாக்கியரின் மகன்களை எப்ரோனிலிருந்து துரத்திவிட்டான். அவர்கள் ஏனாக்கின் வழித்தோன்றல்களான சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்கள்.
15 அங்கிருந்து அவன் தெபீரில் வசித்தவர்களுக்கெதிராக படையெடுத்துச்சென்றான். தெபீர் என்பது முன்பு கீரியாத் செபேர் எனப்பட்டது.
16 காலேப், “கீரியாத் செபேர் நகரைத் தாக்கிக் கைப்பற்றும் வீரனுக்கு, என் மகள் அக்சாளைத் திருமணம் செய்துவைப்பேன்” என்று சொல்லியிருந்தான்.
17 காலேபின் சகோதரனான கேனாசின் மகன் ஒத்னியேல் அந்நகரைக் கைப்பற்றினான். எனவே காலேப் தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
18 ஒரு நாள் அவள் ஒத்னியேலுடன் வந்தபோது, அவளைத் தன் தகப்பனிடம் இன்னும் ஒரு வயல் நிலத்தைக் கேட்கும்படி அவளைத் தூண்டினான். அப்படியே அவள் கழுதையிலிருந்து இறங்கியபோது காலேப் அவளிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
19 அதற்கு அவள், “எனக்கு இன்னும் ஒரு உதவிசெய்ய வேண்டும். நீங்கள் எனக்கு, ‘நெகேவ்’ என்னும் வறண்டபகுதியில் நிலத்தை கொடுத்திருப்பதால் நீரூற்றுள்ள நிலத்தையும் கொடுங்கள்” என்றாள். அப்படியே காலேப் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீரூற்றுள்ள நிலத்தையும் அவளுக்குக் கொடுத்தான்.
20 யூதா கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக வழங்கப்பட்ட சொத்துரிமையாவது:
21 நெகேவின் தென்பகுதியில், ஏதோம் எல்லையை நோக்கி யூதா கோத்திரத்திற்குத் தென்முனையிலிருந்த நகரங்களாவன: கப்சேயேல், ஏதேர், யாகூர்,
22 கீனா, திமோனா, ஆதாதா,
23 கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
24 சீப், தெலெம், பெயாலோத்,
25 ஆத்சோர் அதாத்தா, கீரியோத் எஸ்ரோன் அதாவது ஆத்சோர்,
26 ஆமாம், சேமா, மொலாதா;
27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
28 ஆத்சார்சூவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
29 பாலா, ஈயிம், ஆத்சேம்,
30 எல்தோலாத், கெசீல், ஓர்மா,
31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
33 மேற்கு மலையடிவாரங்களில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா அல்லது கெதெரோத்தாயீம் ஆகிய பதினான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
37 சேனான், அதாஷா, மிக்தால்காத்,
38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
39 லாகீசு, போஸ்காத், எக்லோன்,
40 காபோன், லகமாஸ், கித்லீஷ்,
41 கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா ஆகிய பதினாறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
42 லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
43 இப்தா, அஸ்னா, நெத்சீப்,
44 கேகிலா, அக்சீப், மரேஷா ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
45 எக்ரோனும் அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும்.
46 எக்ரோனின் மேற்கே அஸ்தோத்தின் சுற்றுப்புறமும் அவற்றோடும் அவற்றின் கிராமங்களும்.
47 அஸ்தோத் பட்டணமும் அதன் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும், காசா நகரும், அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், அதன் கிராமங்களும் ஆகும். இப்பிரதேசங்கள் எகிப்தின் ஆறுவரையும் மத்திய தரைக்கடற்கரை வரையும் பரந்திருந்தன.
48 மலைநாட்டில் இருந்தவைகளான: சாமீர், யாத்தீர், சோக்கோ,
49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத் சன்னா,
50 ஆனாப், எஸ்தெமொ, ஆனிம்,
51 கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
52 அராப், ரூமா, எஷான்,
53 யானூம், பெத் தப்புவா, ஆப்பெக்கா
54 உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56 யெஸ்ரயேல், யோக்தெயாம், சனோகா,
57 காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
58 அல்கூல், பெத்சூர், கேதோர்,
59 மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
60 கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
61 பாலைவனத்தில் இருந்த நகரங்களாவன: பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,
62 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி ஆகிய நகரங்களும் அவற்றின் கிராமங்களும் உட்பட ஆறு ஆகும்.
63 ஆனாலும் எருசலேம் பட்டணத்தில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்ற யூதாவினால் முடியவில்லை. எனவே அவர்கள் யூதா மக்களுடன் இன்றுவரை எருசலேமில் வாழ்ந்து வருகிறார்கள்.
×

Alert

×