English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Chronicles Chapters

2 Chronicles 23 Verses

1 ஏழாம் வருடத்தில் யோய்தா தனது வல்லமையைக் காட்டினான். அவன் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்த யெரோகாமின் மகன் அசரியா, யோகனாவின் மகன் இஸ்மயேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியாவின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் உடன்படிக்கை செய்தான்.
2 அவர்கள் யூதா முழுவதும் சென்று, எல்லாப் பட்டணங்களிலுமுள்ள, லேவியர்களையும் இஸ்ரயேல் குடும்பங்களின் தலைவர்களையும் ஒன்றுசேர்த்தார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது,
3 அந்த முழுச் சபையும் அரசனோடு இறைவனின் ஆலயத்தில் ஒரு உடன்படிக்கை செய்தது. யோய்தா அவர்களிடம், “யெகோவா தாவீதின் சந்ததிகளைக் குறித்து வாக்குத்தத்தம் செய்தபடி அரசனுடைய மகன் அரசாட்சி செய்யவேண்டும்.
4 இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது இதுவே: ஓய்வுநாளில் ஊழியம் செய்யும் ஆசாரியர்களிலும், லேவியர்களிலும் மூன்றிலொரு பகுதியினர் வாசல்களைக் காவல் காக்கவேண்டும்,
5 மற்ற மூன்றிலொரு பகுதியினர் அரச அரண்மனையிலும், இன்னும் மூன்றிலொரு பகுதியினர் அஸ்திபார வாசலிலும் காவல் காக்கவேண்டும். மற்ற மனிதர்கள் எல்லோரும் யெகோவாவின் ஆலய முற்றத்தில் நிற்கவேண்டும்.
6 ஆசாரியர்களையும், ஊழியம் செய்யும் லேவியர்களையும் தவிர வேறு யாரும் யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் போகக்கூடாது. ஏனெனில் அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், ஆதலால் அவர்கள் மட்டுமே உள்ளே போகலாம். ஆனால் மற்ற மனிதர்கள் எல்லோரும் யெகோவா தங்களுக்கு ஒப்புக்கொடுத்ததைக் காவல் செய்யவேண்டும்.
7 லேவியர்கள் ஒவ்வொருவரும் தமது யுத்த ஆயுதங்களைக் கையில் பிடித்தவர்களாய் அரசனைச் சுற்றி நிற்கவேண்டும். ஆலயத்திற்குள் போகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும். அரசன் எங்கே போனாலும் அவனுக்கு அருகே நீங்கள் இருங்கள்” என சொன்னான்.
8 ஆசாரியனான யோய்தா உத்தரவிட்டபடியே லேவியர்களும் யூதா மக்கள் எல்லோரும் செய்தனர். ஓய்வுநாளில் பணிபுரிகிறவர்களும், விடுப்பில் போகிறவர்களுமான தம்தம் மனிதரைக் கூட்டிச்சென்றார்கள். ஏனெனில் ஆசாரியன் யோய்தா எந்த ஒரு பிரிவினருக்கும் உத்தரவு கொடுக்கவில்லை.
9 அவன் தாவீது அரசனுக்குச் சொந்தமானதும் இறைவனின் ஆலயத்தில் இருந்ததுமான ஈட்டிகளையும், பெரியதும் சிறியதுமான கேடயங்களையும் நூறுபேருக்குத் தளபதிகளிடம் கொடுத்தான்.
10 எல்லா மனிதரையும் ஒவ்வொருவராய் தன்தன் கையில் ஆயுதங்களைத் தாங்கியபடி அரசனைச் சுற்றி நிறுத்தினான். பலிபீடத்தின் அருகேயும், தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம்வரை ஆலயத்தின் அருகேயும் அவர்களை நிறுத்தினான்.
11 யோய்தாவும், அவன் மகன்களும் அரசனின் மகனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன் தலையில் வைத்தார்கள். அவர்கள் உடன்படிக்கையின் பிரதியொன்றை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அவனை அரசனாக பிரகடனப்படுத்தினார்கள். அவர்கள் அவனை அபிஷேகித்து, “அரசன் நீடூழி வாழ்க!” என்று சத்தமிட்டார்கள்.
12 மக்கள் ஓடித் திரிகின்ற சத்தத்தையும் அரசனை வாழ்த்துகின்ற சத்தத்தையும் அத்தாலியாள் கேட்டாள். அப்போது அவள் யெகோவாவின் ஆலயத்திற்கு அவர்களிடம் வந்தாள்.
13 அங்கே அவள், நுழைவாசலில் அரசனுடைய தூண் அருகே யோவாஸ் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். அத்துடன் அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனின் அருகே நின்றார்கள். நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எக்காளங்களை ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளுடன் துதிப்பதற்கு தலைமை தாங்கினார்கள். அப்பொழுது அத்தாலியாள் தனது அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள்.
14 ஆசாரியன் யோய்தா படைகளுக்குப் பொறுப்பாயிருந்த நூறுபேருக்குத் தளபதிகளை வெளியே அனுப்பினான். அவன் அவர்களிடம், “அவளை ஆலய வளவுக்கு வெளியே கொண்டுபோங்கள். அவளுக்குப் பின்னால் வருகிற எவனையும் வாளினால் கொன்றுபோடுங்கள். அவளை யெகோவாவின் ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.
15 எனவே அவர்கள் அரச அரண்மனை முற்றத்திலுள்ள குதிரை வாசலின் நுழைவாசலில் வைத்து அவளைப் பிடித்து அங்கே கொன்றுபோட்டார்கள்.
16 பின்பு யோய்தா தானும், மக்களும், அரசனும் யெகோவாவின் மக்களாய் இருப்போம் என ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான்.
17 மக்களெல்லோரும் பாகாலின் கோயிலுக்குச் சென்று அதை இடித்து பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் நொறுக்கிப்போட்டார்கள். அத்துடன் பாகாலின் பூசாரியான மாத்தானை பலிபீடங்களுக்கு முன்னேவைத்து கொன்றார்கள்.
18 பின்பு யோய்தா யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பை லேவியரான ஆசாரியர்களின் கைகளில் கொடுத்தான். அவர்களுக்கே மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி மகிழ்ச்சியுடனும், பாடலுடனும் யெகோவாவுக்குத் தகன காணிக்கை செலுத்தும்படி தாவீது ஆலயத்தில் வேலைகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். தாவீது உத்தரவிட்டபடியே யோய்தா செய்தான்.
19 அத்துடன் எவ்வகையிலும் அசுத்தமானவர்கள், ஆலயத்தினுள் போகாதபடி யெகோவாவின் ஆலய வாசலில் காவலர்களை நிறுத்தினான்.
20 பின்பு அவன் தன்னுடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், உயர்குடி மனிதரையும், மக்களின் ஆளுநர்களையும், நாட்டின் எல்லா மக்களையும் கூட்டிக்கொண்டு, அரசனையும் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து கீழே அழைத்து வந்தான். அவர்கள் உயர் வாசல் வழியாக அரண்மனைக்குள் போய் அரச அரியணையில் அரசனை அமர்த்தினார்கள்.
21 நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்; பட்டணம் அமைதியாயிருந்தது. ஏனெனில் அத்தாலியாள் வாளினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள்.
×

Alert

×