English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Chronicles Chapters

1 Chronicles 9 Verses

1 அப்படியே எல்லா இஸ்ரயேலின் வம்சாவழியும், இஸ்ரயேலின் அரசர்களின் பதிவேட்டில் எழுதப்பட்டன. யூதா மக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபடியால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
2 தங்கள் சொந்த இடங்களில் உள்ள தங்கள் சொந்தப் பட்டணங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் சில இஸ்ரயேலரும், ஆசாரியரும், லேவியரும், ஆலய பணிவிடைக்காரருமே.
3 யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன:
4 யூதாவின் மகன் பேரேஸின் வழித்தோன்றலில் வந்த பானியின் மகனான இம்ரியின் மகனான உம்ரி பெற்ற அம்மியூத்தின் மகன் ஊத்தாய்.
5 சீலோனியரைச் சேர்ந்தவர்கள்: முதற்பேறானவன் அசாயாவும் அவனுடைய மகன்களும்.
6 சேராவியரைச் சேர்ந்தவர்கள்: யெகுயேலும், யூதாவின் 690 மக்களும்.
7 பென்யமீனியரைச் சேர்ந்தவர்கள்: சல்லு என்பவன் அசெனுவாவின் மகனான ஓதாவியாவின் மகனான மெசுல்லாமின் மகன்.
8 எரோகாமின் மகனான இப்னேயா; மிக்கிரியின் மகனான ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனான ரேகுயேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.
9 பென்யமீனியர் அவர்களின் வம்சங்களின்படி, கணக்கிடப்பட்டபோது 956 பேராயிருந்தனர். இவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர்.
10 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின்.
11 அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன், அகிதூப் இறைவனுடைய ஆலயத்திற்கு அதிகாரியாயிருந்தான்.
12 அதாயா எரோகாமின் மகன், எரோகாம் பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன். மாசாய் ஆதியேலின் மகன், ஆதியேல் யாசெராவின் மகன், யாசெரா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் மெசில்லேமித்தின் மகன், மெசில்லேமித் இம்மேரின் மகன் என்பவர்களே.
13 குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆசாரியர்கள் 1,760 பேர் இருந்தனர். இவர்கள் இறைவனுடைய ஆலயத்தில் பணிவிடைக்குத் திறமையுடையவர்களும் பொறுப்புடையவர்களுமாய் இருந்தனர்.
14 லேவியரைச் சேர்ந்தவர்கள்: செமாயா அசூபின் மகன், அசூப் அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் மெராரி வம்சத்தைச் சேர்ந்த அசபியாவின் மகன்.
15 லேவிய வம்சாவழியில் பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தனியா ஆகியோரும் அடங்குவர். மத்தனியா மீகாவின் மகன், மீகா சிக்கிரியின் மகன், சிக்ரி ஆசாபின் மகன்.
16 ஒபதியா செமாயாவின் மகன், செமாயா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்; பெரகியா ஆசாவின் மகன், ஆசா எல்க்கானாவின் மகன், எல்க்கானா நெத்தோபாத்தியரின் கிராமங்களில் வாழ்ந்து வந்தான்.
17 வாசல் காவலரைச் சேர்ந்தவர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன் அகீமான் என்பவர்களும், இவர்களின் சகோதரர்களும். சல்லூம் அவர்களுடைய தலைவன்.
18 அவனே கிழக்கிலுள்ள அரச வாசலை இந்நாள்வரை காவல் செய்பவன். இவர்களே லேவிய முகாமைச் சேர்ந்த வாசல் காவலர்.
19 கோராகின் மகனாகிய எபியாசாப்புக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடை வேலையை விசாரித்தார்கள். அவர்கள் தந்தையர்கள் யெகோவாவின் ஆலய வாசலைக் காவல்செய்வதற்குப் பொறுப்பாயிருந்தது போலவே, கூடாரத்திற்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
20 முற்காலத்தில் எலெயாசாரின் மகன் பினெகாஸ் வாசல் காப்போருக்குப் பொறுப்பாய் இருந்தான். யெகோவா அவனுடன் இருந்தார்.
21 மெசெல்மியாவின் மகன் சகரியா சபைக் கூடாரத்திற்கு வாசல் காவலனாயிருந்தான்.
22 வாசல்களிலெல்லாம் காவலிருக்க தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 212 பேர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வம்சாவழியின்படியே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். தாவீதும் தரிசனக்காரனான சாமுயேலும் இவர்களை நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு அமர்த்தினர்.
23 அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் கூடாரம் என்று அழைக்கப்பட்ட யெகோவாவினுடைய ஆலயத்தின் வாசலைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
24 வாசல் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் இருந்தார்கள்.
25 அவர்களுடைய சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து காலத்திற்குக் காலம் ஏழுநாட்களுக்கு கடமைகளைப் பகிர்ந்துகொள்ள வரவேண்டிருந்தது.
26 ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
27 இறைவனது ஆலயத்தைச் சுற்றிக் காவல் காக்கவேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கவேண்டும். அதோடு ஒவ்வொருநாள் காலையிலும் ஆலயத்தைத் திறக்கும் திறப்புக்கும் அவர்களே பொறுப்பாயிருந்தனர்.
28 அவர்களில் சிலர் ஆலயத்தின் பணிக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவரும்போதும், வெளியே கொண்டுபோகும் போதும் அவற்றைக் கணக்கிட்டார்கள்.
29 மற்றவர்கள் பரிசுத்த இடத்தின் பாத்திரங்களையும், மெல்லிய மாவு, திராட்சை இரசம், எண்ணெய், சாம்பிராணி மற்றும் நறுமணப் பொருட்களையும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள்.
30 அத்துடன் சில ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைக் கலப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
31 கோராகியனான சல்லூமின் மூத்த மகனான மத்தித்தியா என்ற லேவியனிடம் காணிக்கை அப்பங்களைச் சுடும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
32 அவர்களின் சகோதரரான கோகாத்தியரில் சிலர், ஒவ்வொரு ஓய்வுநாளுக்கும் தேவையான அப்பங்களை மேஜையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
33 லேவிய குடும்பத் தலைவர்களான இசைக் கலைஞர்கள் இரவும் பகலும் இடைவிடாது பணிசெய்ய வேண்டியிருந்ததால், மற்ற வேலைகளிலிருந்து விடுபட்டு ஆலயத்தின் அறைகளிலேயே தங்கியிருந்தனர்.
34 இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
35 கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
36 இவனது மூத்த மகன் அப்தோன். அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்கள்.
38 மிக்லோத் சிமியாமின் தகப்பன்; இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
39 நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.
40 யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
41 மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.
42 ஆகாஸ் யாராக்கின் தகப்பன். யாராக் அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன், சிம்ரி மோசாவின் தகப்பன்,
43 மோசா பினியாவின் தகப்பன், அவன் மகன் ரப்பாயா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்.
44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்கள் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேலின் மகன்கள்.
×

Alert

×