இராணுவப் பிரிவு சம்பந்தமான எல்லாப் பணிகளிலும் அரசனுக்கு உதவிய இஸ்ரயேலரின் பட்டியல் இதுவே: குடும்பத் தலைவர்கள், ஆயிரம்பேரின் தளபதிகள், நூறுபேரின் தளபதிகள், அவர்களின் அதிகாரிகள் அனைவரும் அவரவர் பிரிவின்படி வருடம் முழுவதும் மாதந்தோறும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 மனிதர்கள் இருந்தனர். அவர்கள்:
இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான்.
மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான்.
நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை.
அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.