Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 91 Verses

1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் [QBR] சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். [QBR]
2 நான் யெகோவாவை நோக்கி: [QBR] நீர் என்னுடைய அடைக்கலம், [QBR] என்னுடைய கோட்டை, என் தேவன், [QBR] நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். [QBR]
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், [QBR] பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். [QBR]
4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; [QBR] அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; [QBR] அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். [QBR]
5 இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், [QBR]
6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், [QBR] மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். [QBR]
7 உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், [QBR] உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், [QBR] அது உன்னை அணுகாது. [QBR]
8 உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். [QBR]
9 எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை [QBR] உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். [QBR]
10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, [QBR] வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. [QBR]
11 உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, [QBR] உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். [QBR]
12 உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு [QBR] அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். [QBR]
13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, [QBR] பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். [QBR]
14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; [QBR] என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் [QBR] அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். [QBR]
15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், [QBR] நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; [QBR] ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, [QBR] அவனைக் கனப்படுத்துவேன். [QBR]
16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, [QBR] என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். [PE]
×

Alert

×