Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 81 Verses

1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, [QBR] யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள். [QBR]
2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, [QBR] பாட்டு பாடுங்கள். [QBR]
3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், [QBR] நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள். [QBR]
4 இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், [QBR] யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது. [QBR]
5 நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, [QBR] இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார். [QBR]
6 அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; [QBR] அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது. [QBR]
7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; [QBR] இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; [QBR] மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா) [QBR]
8 என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; [QBR] இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும். [QBR]
9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; [QBR] அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம். [QBR]
10 உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; [QBR] உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன். [QBR]
11 என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; [QBR] இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. [QBR]
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; [QBR] தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். [QBR]
13 ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, [QBR] இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்! [QBR]
14 நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, [QBR] என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன். [QBR]
15 அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; [QBR] அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். [QBR]
16 செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; [QBR] கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். [PE]
×

Alert

×