Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 76 Verses

1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; [QBR] இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. [QBR]
2 சாலேமில் அவருடைய கூடாரமும், [QBR] சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. [QBR]
3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், [QBR] கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) [QBR]
4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். [QBR]
5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, [QBR] உறங்கி அசந்தார்கள்; [QBR] வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. [QBR]
6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் [QBR] இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. [QBR]
7 நீர், நீரே, பயங்கரமானவர்; [QBR] உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? [QBR]
8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், [QBR] தேவனே நீர் எழுந்தருளினபோது, [QBR]
9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; [QBR] பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) [QBR]
10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; [QBR] மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். [QBR]
11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; [QBR] அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். [QBR]
12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; [QBR] பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். [PE]
×

Alert

×