Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 68 Verses

1 தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி, [QBR] அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள். [QBR]
2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; [QBR] மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள். [QBR]
3 நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, [QBR] ஆனந்த சந்தோஷமடைவார்கள். [QBR]
4 தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; [QBR] வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; [QBR] அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். [QBR]
5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், [QBR] திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார். [QBR]
6 தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, [QBR] கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; [QBR] துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். [QBR]
7 தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா) [QBR]
8 பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; [QBR] இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது. [QBR]
9 தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்; [QBR] இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர். [QBR]
10 உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; [QBR] தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர். [QBR]
11 ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. [QBR]
12 சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; [QBR] வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். [QBR]
13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும், [QBR] வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் [* புறாக்கள் இஸ்ரவேல் பெண்களுக்கு அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது] போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். [QBR]
14 சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, [QBR] அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது. [QBR]
15 தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; [QBR] பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. [QBR]
16 உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; [QBR] ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார். [QBR]
17 தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும், [QBR] ஆயிரமாயிரங்களுமாக இருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்ததைபோல அவைகளுக்குள் இருக்கிறார். [QBR]
18 தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, [QBR] சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; [QBR] தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, [QBR] துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். [QBR]
19 எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; [QBR] நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா) [QBR]
20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; [QBR] ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. [QBR]
21 மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், [QBR] தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார். [QBR]
22 உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், [QBR] உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும், [QBR]
23 என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; [QBR] அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார். [QBR]
24 தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; [QBR] என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். [QBR]
25 முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், [QBR] சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். [QBR]
26 இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, [QBR] சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். [QBR]
27 அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், [QBR] அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், [QBR] நப்தலியின் பிரபுக்களும் உண்டு. [QBR]
28 உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; [QBR] தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும். [QBR]
29 எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, [QBR] ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். [QBR]
30 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; [QBR] ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; [QBR] யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார். [QBR]
31 பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; [QBR] எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும். [QBR]
32 பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா) [QBR]
33 ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; [QBR] இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார். [QBR]
34 தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; [QBR] அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. [QBR]
35 தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; [QBR] இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; [QBR] தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. [PE]
×

Alert

×