Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 65 Verses

1 தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; [QBR] பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். [QBR]
2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள். [QBR]
3 அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; [QBR] தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர். [QBR]
4 உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; [QBR] உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். [QBR]
5 பூமியின் கடைசி எல்லைகளிலும் [QBR] தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற [QBR] எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, [QBR] நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர். [QBR]
6 வல்லமையைக் கட்டிக்கொண்டு, [QBR] உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி, [QBR]
7 கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், [QBR] மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர். [QBR]
8 பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; [QBR] காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர். [QBR]
9 தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; [QBR] தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; [QBR] இப்படி நீர் அதைத் திருத்தி, [QBR] அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். [QBR]
10 அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, [QBR] அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். [QBR]
11 வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; [QBR] உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது. [QBR]
12 வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; [QBR] மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது. [QBR]
13 மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; [QBR] பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; [QBR] அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. [PE]
×

Alert

×