Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 60 Verses

1 தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், [QBR] எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும். [QBR]
2 பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்; [QBR] அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது. [QBR]
3 உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; [QBR] தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். [QBR]
4 சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு [QBR] ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா) [QBR]
5 உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி, [QBR] உமது வலதுகரத்தினால் காப்பாற்றி, எனக்குச் செவிகொடுத்தருளும். [QBR]
6 தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார், [QBR] ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, [QBR] சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். [QBR]
7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, [QBR] எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல். [QBR]
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், [QBR] ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; [QBR] பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். [QBR]
9 பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? [QBR] ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்? [QBR]
10 எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ? [QBR] எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ? [QBR]
11 ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்; [QBR] மனிதனுடைய உதவி வீண். [QBR]
12 தேவனாலே பலத்தோடு போராடுவோம்; [QBR] அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார். [PE]
×

Alert

×