Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 56 Verses

1 தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், [QBR] நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். [QBR]
2 என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; [QBR] உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். [QBR]
3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். [QBR]
4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், [QBR] நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்? [QBR]
5 எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; [QBR] எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது. [QBR]
6 அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; [QBR] என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். [QBR]
7 அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? [QBR] தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும். [QBR]
8 என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; [QBR] என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; [QBR] அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? [QBR]
9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; [QBR] தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். [QBR]
10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; [QBR] யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். [QBR]
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; [QBR] மனிதன் எனக்கு என்ன செய்வான்? [QBR]
12 தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; [QBR] உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். [QBR]
13 நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, [QBR] நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ? [PE]
×

Alert

×