Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 51 Verses

1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், [QBR] உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். [QBR]
2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, [QBR] என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும். [QBR]
3 என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; [QBR] என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. [QBR]
4 தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து, [QBR] உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்; [QBR] நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, [QBR] உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன். [QBR]
5 இதோ, நான் அநீதியில் உருவானேன்; [QBR] என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். [QBR]
6 இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; [QBR] உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். [QBR]
7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், [QBR] அப்பொழுது நான் சுத்தமாவேன்; [QBR] என்னைக் கழுவியருளும்; [QBR] அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். [QBR]
8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், [QBR] அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும். [QBR]
9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து, [QBR] என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். [QBR]
10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும். [QBR]
11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், [QBR] உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். [QBR]
12 உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, [QBR] உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். [QBR]
13 அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; [QBR] பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். [QBR]
14 தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, [QBR] இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; [QBR] அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும். [QBR]
15 ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; [QBR] அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். [QBR]
16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; [QBR] தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. [QBR]
17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; [QBR] தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை. [QBR]
18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; [QBR] எருசலேமின் மதில்களைக் கட்டும். [QBR]
19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய [QBR] நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; [QBR] அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். [PE]
×

Alert

×