என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், [QBR] என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; [QBR] என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, [QBR] என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது. [QBR]
என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், [QBR] நான் என் அயலாருக்கு நிந்தையும், [QBR] எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; [QBR] வீதியிலே என்னைக் கண்டவர்கள் [QBR] எனக்கு விலகி ஓடிப்போனார்கள். [QBR]
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; [QBR] எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் [QBR] திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; [QBR] என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள். [QBR]
உமக்குப் பயந்தவர்களுக்கும், [QBR] மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், [QBR] நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது! [QBR]
உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று [QBR] நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; [QBR] ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, [QBR] என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். [QBR]