Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 31 Verses

1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; [QBR] நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; [QBR] உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். [QBR]
2 உமது செவியை எனக்குச் சாய்த்து, [QBR] சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; [QBR] நீர் எனக்குப் பலத்த கோபுரமும், [QBR] எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும். [QBR]
3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; [QBR] உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, [QBR] என்னை நடத்தியருளும். [QBR]
4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; [QBR] தேவனே நீரே எனக்கு அடைக்கலம். [QBR]
5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; [QBR] சத்தியபரனாகிய யெகோவாவே, [QBR] நீர் என்னை மீட்டுக்கொண்டீர். [QBR]
6 பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, [QBR] யெகோவாவையே நம்பியிருக்கிறேன். [QBR]
7 உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; [QBR] நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, [QBR] என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர். [QBR]
8 எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், [QBR] என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். [QBR]
9 எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; [QBR] துக்கத்தினால் என் கண்ணும் [QBR] என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது. [QBR]
10 என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், [QBR] என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; [QBR] என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, [QBR] என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது. [QBR]
11 என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், [QBR] நான் என் அயலாருக்கு நிந்தையும், [QBR] எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; [QBR] வீதியிலே என்னைக் கண்டவர்கள் [QBR] எனக்கு விலகி ஓடிப்போனார்கள். [QBR]
12 செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; [QBR] உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன். [QBR]
13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; [QBR] எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் [QBR] திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; [QBR] என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள். [QBR]
14 நானோ, யெகோவாவே, [QBR] உம்மை நம்பியிருக்கிறேன்; [QBR] நீரே என் தேவன் என்று சொன்னேன். [QBR]
15 என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; [QBR] என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் [QBR] என்னைத் தப்புவியும். [QBR]
16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, [QBR] உமது கிருபையினாலே என்னை இரட்சியும். [QBR]
17 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; [QBR] நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; [QBR] துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். [QBR]
18 நீதிமானுக்கு விரோதமாகப் [QBR] பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. [QBR]
19 உமக்குப் பயந்தவர்களுக்கும், [QBR] மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், [QBR] நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது! [QBR]
20 மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, [QBR] நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, [QBR] உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். [QBR]
21 யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், [QBR] அவருக்கு ஸ்தோத்திரம். [QBR]
22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று [QBR] நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; [QBR] ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, [QBR] என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். [QBR]
23 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, [QBR] நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; [QBR] உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, [QBR] வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார். [QBR]
24 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, [QBR] நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், [QBR] அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார். [PE]
×

Alert

×