Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 30 Verses

1 யெகோவாவே, [QBR] என்னுடைய எதிரிகள் [QBR] என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், [QBR] நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், [QBR] நான் உம்மைப் போற்றுவேன். [QBR]
2 என் தேவனாகிய யெகோவாவே, [QBR] உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், [QBR] என்னை நீர் குணமாக்கினீர். [QBR]
3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, [QBR] நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். [QBR]
4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, [QBR] அவரைப் புகழ்ந்துபாடி, [QBR] அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். [QBR]
5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, [QBR] அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; [QBR] மாலையில் அழுகை வரும், [QBR] அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். [QBR]
6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, [QBR] நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். [QBR]
7 யெகோவாவே, உம்முடைய தயவினால் [QBR] நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; [QBR] உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; [QBR]
8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? [QBR] புழுதி உம்மைத் துதிக்குமோ? [QBR] அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? [QBR]
9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து [QBR] என்மேல் இரக்கமாக இரும்; [QBR] யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; [QBR]
10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; [QBR] யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். [QBR]
11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; [QBR] என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் [QBR] உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக [QBR] நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, [QBR] மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். [QBR]
12 என் தேவனாகிய யெகோவாவே, [QBR] உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன். [PE]
×

Alert

×