Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 25 Verses

1 யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QBR]
2 என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், [QBR] நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; [QBR] என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். [QBR]
3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; [QBR] காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. [QBR]
4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; [QBR] உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். [QBR]
5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; [QBR] நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், [QBR] உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். [QBR]
6 யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், [QBR] அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. [QBR]
7 என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; [QBR] யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். [QBR]
8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; [QBR] ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். [QBR]
9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, [QBR] சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். [QBR]
10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, [QBR] அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. [QBR]
11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; [QBR] உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். [QBR]
12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ [QBR] அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். [QBR]
13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; [QBR] அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். [QBR]
14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; [QBR] அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். [QBR]
15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; [QBR] அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். [QBR]
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; [QBR] நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். [QBR]
17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; [QBR] என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். [QBR]
18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, [QBR] என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். [QBR]
19 என்னுடைய எதிரிகளைப் பாரும்; [QBR] அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். [QBR]
20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; [QBR] நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். [QBR]
21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; [QBR] நான் உமக்குக் காத்திருக்கிறேன். [QBR]
22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும். [PE]
×

Alert

×