Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 17 Verses

1 யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், [QBR] என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; [QBR] பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் [QBR] என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். [QBR]
2 உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; [QBR] உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக. [QBR]
3 நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, [QBR] இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் [QBR] ஒன்றும் காணாமலிருக்கிறீர்; [* மற்றவர்களைப் போல தீமை பேசுகிறதில்லை.] என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன். [QBR]
4 மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே [QBR] தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன். [QBR]
5 என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. [QBR] என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. [QBR]
6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், [QBR] ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, [QBR] என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். [QBR]
7 உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து [QBR] உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! [QBR] உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும். [QBR]
8 கண்மணியைப்போல் என்னைக் காத்து. [QBR]
9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், [QBR] என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, [QBR] உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். [QBR]
10 அவர்கள் கொழுத்துப்போய், [QBR] தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள். [QBR]
11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; [QBR] எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன. [QBR]
12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், [QBR] மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள். [QBR]
13 யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் [QBR] என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். [QBR]
14 யெகோவாவே, மனிதருடைய கைக்கும், [QBR] இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் [QBR] உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; [QBR] அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; [QBR] அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, [QBR] தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். [QBR]
15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; [QBR] நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன். [PE]
×

Alert

×