Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 143 Verses

1 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், [QBR] என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; [QBR] உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். [QBR]
2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, [QBR] அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். [QBR]
3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, [QBR] என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, [QBR] வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். [QBR]
4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; [QBR] என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QBR]
5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; [QBR] உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். [QBR]
6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; [QBR] வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) [QBR]
7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், [QBR] என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; [QBR] நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, [QBR] உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். [QBR]
8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், [QBR] உம்மை நம்பியிருக்கிறேன், [QBR] நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; [QBR] உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QBR]
9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; [QBR] உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். [QBR]
10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், [QBR] நீரே என் தேவன்; [QBR] உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். [QBR]
11 யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; [QBR] உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை [QBR] பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். [QBR]
12 உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, [QBR] என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; [QBR] நான் உமது அடியேன். [PE]
×

Alert

×