Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 115 Verses

1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, [QBR] உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். [QBR]
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே [QBR] என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? [QBR]
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; [QBR] தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். [QBR]
4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், [QBR] மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. [QBR]
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; [QBR] அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. [QBR]
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; [QBR] அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. [QBR]
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; [QBR] அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; [QBR] தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. [QBR]
8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், [QBR] அவைகளைப்போலவே இருக்கிறார்கள். [QBR]
9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; [QBR] அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QBR]
10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; [QBR] அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QBR]
11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, [QBR] யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QBR]
12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், [QBR] அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், [QBR] அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். [QBR]
13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், [QBR] சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். [QBR]
14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். [QBR]
15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
16 வானங்கள் யெகோவாவுடையவைகள்; [QBR] பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். [QBR]
17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் [QBR] யெகோவாவை துதிக்கமாட்டார்கள். [QBR]
18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் [QBR] யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். [QBR] அல்லேலூயா. [PE]
×

Alert

×