Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 9 Verses

1 {ஞானி மற்றும் பேதையர்களுக்கான அழைப்பு} [PS] ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, [QBR] தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, [QBR]
2 தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, [QBR] திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, [QBR] தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, [QBR]
3 தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, [QBR] பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, [QBR]
4 புத்தியீனனை நோக்கி: [QBR] எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். [QBR]
5 நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, [QBR] நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். [QBR]
6 பேதமையைவிட்டு விலகுங்கள், [QBR] அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; [QBR] புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. [QBR]
7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; [QBR] துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். [QBR]
8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, [QBR] அவன் உன்னைப் பகைப்பான்; [QBR] ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், [QBR] அவன் உன்னை நேசிப்பான். [QBR]
9 ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; [QBR] நீதிமானுக்கு உபதேசம் செய், [QBR] அவன் அறிவில் விருத்தியடைவான். [QBR]
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QBR] பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. [QBR]
11 என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; [QBR] ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும். [QBR]
12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; [QBR] நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. [QBR]
13 மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். [QBR]
14 அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து, [QBR]
15 தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: [QBR]
16 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், [QBR]
17 மதியீனனை நோக்கி: [QBR] திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், [QBR] மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். [QBR]
18 இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், [QBR] அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். [PE]
×

Alert

×