Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 7 Verses

1 {விபசாரிக்கு எதிரான எச்சரிக்கை} [PS] என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, [QBR] என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. [QBR]
2 என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், [QBR] அப்பொழுது பிழைப்பாய். [QBR]
3 அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, [QBR] அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள். [QBR]
4 ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, [QBR]
5 ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், [QBR] புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. [QBR]
6 நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, [QBR] அதின் வழியாகப் பார்த்தபோது, [QBR]
7 பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே [QBR] ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன். [QBR]
8 அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், [QBR] இரவின் இருளிலும். [QBR]
9 அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, [QBR] அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான். [QBR]
10 அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த [QBR] தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். [QBR]
11 அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; [QBR] அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை. [QBR]
12 சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், [QBR] சந்துகள்தோறும் மறைந்திருப்பாள். [QBR]
13 அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, [QBR] முகம் நாணாமல் அவனைப் பார்த்து: [QBR]
14 சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, [QBR] இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன். [QBR]
15 ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, [QBR] உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; [QBR] இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். [QBR]
16 என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், [QBR] எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன். [QBR]
17 என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் [QBR] சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன். [QBR]
18 வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், [QBR] இன்பங்களினால் பூரிப்போம். [QBR]
19 கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். [QBR]
20 பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், [QBR] குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, [QBR]
21 தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, [QBR] தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள். [QBR]
22 உடனே அவன் அவள் பின்னே சென்றான்; [QBR] ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், [QBR] ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், [QBR]
23 ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் [QBR] அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், [QBR] அவளுக்குப் பின்னே போனான்; [QBR] அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது. [QBR]
24 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; [QBR] என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். [QBR]
25 உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; [QBR] அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே. [QBR]
26 அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; [QBR] பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். [QBR]
27 அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; [QBR] அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். [PE]
×

Alert

×