Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 6 Verses

1 {அறிவீனத்திற்கு எதிரான எச்சரிக்கை} [PS] என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, [QBR] அந்நியனுக்கு உறுதியளித்தால், [QBR]
2 நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், [QBR] உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். [QBR]
3 இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், [QBR] நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். [QBR]
4 உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், [QBR] உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், [QBR] உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, [QBR] அவனை வருந்திக் கேட்டுக்கொள். [QBR]
5 வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, [QBR] நீ உன்னைத் தப்புவித்துக்கொள். [QBR]
6 சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், [QBR] அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். [QBR]
7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், [QBR]
8 கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, [QBR] அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். [QBR]
9 சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? [QBR] எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? [QBR]
10 இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், [QBR] இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? [QBR]
11 உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், [QBR] உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். [QBR]
12 வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். [QBR]
13 அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, [QBR] தன்னுடைய கால்களால் பேசி, [QBR] தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான். [QBR]
14 அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; [QBR] இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, [QBR] வழக்குகளை உண்டாக்குகிறான். [QBR]
15 ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; [QBR] உதவியில்லாமல் திடீரென நாசமடைவான். [QBR]
16 ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், [QBR] ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். [QBR]
17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, [QBR] குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, [QBR]
18 மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், [QBR] தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால், [QBR]
19 பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, [QBR] சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே. [QBR]
20 என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; [QBR] உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே. [QBR]
21 அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். [QBR]
22 நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; [QBR] நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; [QBR] நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். [QBR]
23 கட்டளையே விளக்கு, [QBR] வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி. [QBR]
24 அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், [QBR] ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும். [QBR]
25 உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; [QBR] அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. [QBR]
26 விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; [QBR] விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். [QBR]
27 தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? [QBR]
28 தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா? [QBR]
29 பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், [QBR] அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான். [QBR]
30 திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்; [QBR]
31 அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; [QBR] தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். [QBR]
32 பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; [QBR] அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். [QBR]
33 வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; [QBR] அவனுடைய நிந்தை ஒழியாது. [QBR]
34 பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; [QBR] அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான். [QBR]
35 அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; [QBR] அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான். [PE]
×

Alert

×