Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 5 Verses

1 {விபசாரத்திற்கு எதிரான எச்சரிக்கை} [PS] என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, [QBR] என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்; [QBR]
2 அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், [QBR] உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். [QBR]
3 ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; [QBR] அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். [QBR]
4 அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், [QBR] இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும். [QBR]
5 அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; [QBR] அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். [QBR]
6 நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, [QBR] அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது. [QBR]
7 ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; [QBR] என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள். [QBR]
8 உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; [QBR] அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. [QBR]
9 சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், [QBR] உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய். [QBR]
10 அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; [QBR] உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும். [QBR]
11 முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: [QBR]
12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, [QBR] கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே! [QBR]
13 என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், [QBR] எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே! [QBR]
14 சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய [QBR] எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய். [QBR]
15 உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், [QBR] உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. [QBR]
16 உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் [QBR] உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. [QBR]
17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், [QBR] உனக்கே உரியவைகளாக இருப்பதாக. [QBR]
18 உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; [QBR] உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. [QBR]
19 அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், [QBR] அழகான வரையாடும்போல இருப்பாளாக; [QBR] அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; [QBR] அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு. [QBR]
20 என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, [QBR] அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? [QBR]
21 மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; [QBR] அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். [QBR]
22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; [QBR] தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். [QBR]
23 அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, [QBR] தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான். [PE]
×

Alert

×