Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 31 Verses

1 {லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள்} [PS] ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; [QBR] அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: [QBR]
2 என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, [QBR] என்னுடைய பொருத்தனைகளின் மகனே, [QBR]
3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் [QBR] ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. [QBR]
4 திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; [QBR] லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; [QBR] மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. [QBR]
5 மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, [QBR] சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். [QBR]
6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; [QBR]
7 அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, [QBR] தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். [QBR]
8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் [QBR] உன்னுடைய வாயைத் திற. [QBR]
9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, [QBR] சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். [QBR]
10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? [QBR] அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. [QBR]
11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; [QBR] அவனுடைய செல்வம் குறையாது. [QBR]
12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, [QBR] நன்மையையே செய்கிறாள். [QBR]
13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, [QBR] தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். [QBR]
14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; [QBR] தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். [QBR]
15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, [QBR] தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். [QBR]
16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; [QBR] தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். [QBR]
17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, [QBR] தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். [QBR]
18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; [QBR] இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். [QBR]
19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; [QBR] அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். [QBR]
20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, [QBR] ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். [QBR]
21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், [QBR] தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். [QBR]
22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; [QBR] மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. [QBR]
23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது [QBR] பெயர் பெற்றவனாக இருக்கிறான். [QBR]
24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; [QBR] கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். [QBR]
25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; [QBR] வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். [QBR]
26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; [QBR] தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. [QBR]
27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், [QBR] தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். [QBR]
28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி, [QBR] அவளை பாக்கியவதி என்கிறார்கள்; [QBR] அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: [QBR]
29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; [QBR] நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். [QBR]
30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், [QBR] யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். [QBR]
31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; [QBR] அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக. [PE]
×

Alert

×