Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 21 Verses

1 {யெகோவாவின் ஆளுகை} [PS] ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; [QBR] அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். [QBR]
2 மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; [QBR] யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். [QBR]
3 பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம். [QBR]
4 மேட்டிமையான பார்வையும், [QBR] அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், [QBR] பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். [QBR]
6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது [QBR] சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். [QBR]
7 துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், [QBR] அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள். [QBR]
8 குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; [QBR] சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன். [QBR]
9 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, [QBR] வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். [QBR]
10 துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; [QBR] அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. [QBR]
11 பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; [QBR] ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். [QBR]
12 நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; [QBR] துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். [QBR]
13 ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், [QBR] தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். [QBR]
14 இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; [QBR] மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். [QBR]
15 நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், [QBR] அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். [QBR]
16 விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். [QBR]
17 சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; [QBR] மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. [QBR]
18 நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், [QBR] செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். [QBR]
19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட [QBR] வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். [QBR]
20 வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; [QBR] மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். [QBR]
21 நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் [QBR] நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். [QBR]
22 பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, [QBR] அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். [QBR]
23 தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் [QBR] தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். [QBR]
24 அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், [QBR] அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். [QBR]
25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், [QBR] அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். [QBR]
26 அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; [QBR] நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். [QBR]
27 துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; [QBR] அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். [QBR]
28 பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; [QBR] செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். [QBR]
29 துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; [QBR] செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான். [QBR]
30 யெகோவாவுக்கு விரோதமான [QBR] ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. [QBR]
31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; [QBR] வெற்றியோ யெகோவாவால் வரும். [PE]
×

Alert

×