Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 17 Verses

1 {விவேகத்தினால் வரும் நன்மை} [PS] சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, [QBR] சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். [QBR]
2 புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, [QBR] சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். [QBR]
3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; [QBR] இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. [QBR]
4 தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; [QBR] பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். [QBR]
5 ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; [QBR] ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். [QBR]
6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; [QBR] பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. [QBR]
7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; [QBR] பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. [QBR]
8 லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; [QBR] அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். [QBR]
9 குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; [QBR] கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். [QBR]
10 மூடனை நூறடி அடிப்பதைவிட, [QBR] புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். [QBR]
11 தீயவன் கலகத்தையே தேடுகிறான்; [QBR] கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். [QBR]
12 தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, [QBR] குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். [QBR]
13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, [QBR] அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. [QBR]
14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; [QBR] ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. [QBR]
15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், [QBR] நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். [QBR]
16 ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? [QBR] அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. [QBR]
17 நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; [QBR] இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். [QBR]
18 புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். [QBR]
19 விவாதப்பிரியன் பாவப்பிரியன்; [QBR] தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். [QBR]
20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; [QBR] பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். [QBR]
21 மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; [QBR] மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. [QBR]
22 மனமகிழ்ச்சி நல்ல மருந்து; [QBR] முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். [QBR]
23 துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். [QBR]
24 ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; [QBR] மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். [QBR]
25 மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், [QBR] தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். [QBR]
26 நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. [QBR]
27 அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; [QBR] விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். [QBR]
28 பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; [QBR] தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். [PE]
×

Alert

×