மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள்.
யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்:
பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேதுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் ஈத்தியேலுக்கும், இவன் எஷாயாவுக்கும் மகனானவன்.
ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும்,
ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே.
எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அஷபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன்.
தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,