Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 41 Verses

1 “லிவியாதானை [* பெரிய திமிங்கலம் அ. முதலையாக இருக்கலாம்.] தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? [QBR] அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ? [QBR]
2 அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? [QBR] குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ? [QBR]
3 அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? [QBR] உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ? [QBR]
4 அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? [QBR] அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ? [QBR]
5 ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், [QBR] நீ அதனுடன் விளையாடி, [QBR] அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ? [QBR]
6 மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, [QBR] அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? [QBR]
7 நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், [QBR] அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? [QBR]
8 அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; [QBR] இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். [QBR]
9 இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், [QBR] அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? [QBR]
10 அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, [QBR] எனக்கு முன்பாக நிற்பவன் யார்? [QBR]
11 தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? [QBR] வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். [QBR]
12 அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், [QBR] அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். [QBR]
13 அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? [QBR] அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்? [QBR]
14 அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள். [QBR]
15 முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது. [QBR]
16 அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல் [QBR] நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
17 அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு [QBR] இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. [QBR]
18 அது தும்மும்போது ஒளி வீசும், [QBR] அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது. [QBR]
19 அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, [QBR] நெருப்புப்பொறிகள் பறக்கும். [QBR]
20 கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, [QBR] அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும். [QBR]
21 அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், [QBR] அதின் வாயிலிருந்து தணல் புறப்படும். [QBR]
22 அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; [QBR] பயங்கரம் அதற்குமுன் நடனமாடும். [QBR]
23 அதின் உடல் அடுக்குகள், [QBR] அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். [QBR]
24 அதின் நெஞ்சு கல்லைப்போலவும், [QBR] எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். [QBR]
25 அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். [QBR]
26 அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, [QBR] வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. [QBR]
27 அது இரும்பை வைக்கோலாகவும், [QBR] வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும். [QBR]
28 அம்பு அதைத் துரத்தாது; [QBR] கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும். [QBR]
29 அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, [QBR] ஈட்டியின் அசைவை இகழும். [QBR]
30 அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், [QBR] அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும். [QBR]
31 அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, [QBR] கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும். [QBR]
32 அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; [QBR] ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும். [QBR]
33 பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; [QBR] அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது. [QBR]
34 அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; [QBR] அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார். [PE]
×

Alert

×