Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 4 Verses

1 {எலிப்பாஸின் வார்த்தைகள்} [PS] அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: [QBR]
2 நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? [QBR] ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? [QBR]
3 இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, [QBR] சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர். [QBR]
4 விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், [QBR] தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். [QBR]
5 இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; [QBR] அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். [QBR]
6 உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், [QBR] உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ? [QBR]
7 குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? [QBR] சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? [QBR] இதை நினைத்துப்பாரும்.
8 நான் கண்டிருக்கிறபடி, [QBR] அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், [QBR] அதையே அறுக்கிறார்கள். [QBR]
9 தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, [QBR] அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். [QBR]
10 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; [QBR] பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். [QBR]
11 கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், [QBR] பாலசிங்கங்கள் சிதறிப்போகும். [QBR]
12 இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, [QBR] அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது. [QBR]
13 மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, [QBR] இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, [QBR]
14 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, [QBR] என் எலும்புகளெல்லாம் நடுங்கியது. [QBR]
15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, [QBR] என் உடலின் முடிகள் சிலிர்த்தது. [QBR]
16 அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, [QBR] ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; [QBR] அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: [QBR]
17 மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? [QBR] மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? [QBR]
18 கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; [QBR] தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, [QBR]
19 புழுதியில் அஸ்திபாரம் போட்டு, [QBR] மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் [QBR] அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? [QBR]
20 காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, [QBR] கவனிப்பார் ஒருவருமில்லாமல், [QBR] நிலையான அழிவை அடைகிறார்கள். [QBR]
21 அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? [QBR] ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான். [PE]
×

Alert

×