Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 23 Verses

1 {யோபுவின் வார்த்தைகள்} [PS] யோபு மறுமொழியாக: [QBR]
2 “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; [QBR] என் தவிப்பைவிட என் வாதை கடினமானது. [QBR]
3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; [QBR] அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து, [QBR]
4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, [QBR] காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். [QBR]
5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, [QBR] அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். [QBR]
6 அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? [QBR] அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். [QBR]
7 அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; [QBR] அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன். [QBR]
8 இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; [QBR] பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. [QBR]
9 இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; [QBR] வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். [QBR]
10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; [QBR] அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். [QBR]
11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; [QBR] அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். [QBR]
12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; [QBR] அவருடைய வாயின் வார்த்தைகளை [QBR] எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். [QBR]
13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; [QBR] அவரைத் திருப்பத்தக்கவர் யார்? [QBR] அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார். [QBR]
14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; [QBR] இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. [QBR]
15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; [QBR] நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். [QBR]
16 தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; [QBR] சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார். [QBR]
17 இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், [QBR] இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன். [PE]
×

Alert

×