Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 15 Verses

1 {எலிப்பாஸின் வார்த்தைகள்} [PS] அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: [QBR]
2 ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, [QBR] தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, [QBR]
3 பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ? [QBR]
4 நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, [QBR] தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர். [QBR]
5 உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; [QBR] நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர். [QBR]
6 நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது; [QBR] உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது. [QBR]
7 மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? [QBR] மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? [QBR]
8 நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, [QBR] ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ? [QBR]
9 நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? [QBR] எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? [QBR]
10 உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. [QBR]
11 தேவன் அருளிய ஆறுதல்களும், [QBR] உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ? [QBR]
12 உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? [QBR] உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன? [QBR]
13 தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர். [QBR]
14 மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், [QBR] பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? [QBR]
15 இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; [QBR] வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. [QBR]
16 அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? [QBR]
17 உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; [QBR] நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். [QBR]
18 ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். [QBR]
19 அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; [QBR] அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. [QBR]
20 துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; [QBR] பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
21 பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; [QBR] அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். [QBR]
22 இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், [QBR] ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான். [QBR]
23 அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; [QBR] இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். [QBR]
24 இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, [QBR] போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும். [QBR]
25 அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, [QBR] சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான். [QBR]
26 கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான். [QBR]
27 அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; [QBR] அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது. [QBR]
28 ஆனாலும் பாழான பட்டணங்களிலும், [QBR] குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான். [QBR]
29 அவன் செல்வந்தனாவதுமில்லை, [QBR] அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; [QBR] அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. [QBR]
30 இருளுக்கு அவன் தப்புவதில்லை; [QBR] நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; [QBR] அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; [QBR]
31 வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; [QBR] நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும். [QBR]
32 அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; [QBR] அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை. [QBR]
33 பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான். [QBR]
34 மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; [QBR] லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும். [QBR]
35 அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; [QBR] அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான். [PE]
×

Alert

×