Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 13 Verses

1 இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, [QBR] என் காது கேட்டு அறிந்திருக்கிறது. [QBR]
2 நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; [QBR] நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. [QBR]
3 சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; [QBR] தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். [QBR]
4 நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; [QBR] நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். [QBR]
5 நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; [QBR] அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். [QBR]
6 நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, [QBR] என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். [QBR]
7 நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, [QBR] அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? [QBR]
8 அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? [QBR] தேவனுக்காக வழக்காடுவீர்களோ? [QBR]
9 அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? [QBR] மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? [QBR]
10 நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், [QBR] அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். [QBR]
11 அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? [QBR] அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? [QBR]
12 உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; [QBR] உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். [QBR]
13 நீங்கள் மவுனமாயிருங்கள், [QBR] நான் பேசுகிறேன், [QBR] எனக்கு வருகிறது வரட்டும். [QBR]
14 நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, [QBR] என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்? [QBR]
15 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், [QBR] அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். [QBR]
16 அவரே என் பாதுகாப்பு; [QBR] மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான். [QBR]
17 என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், [QBR] உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள். [QBR]
18 இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; [QBR] என் நீதி விளங்கும் என்று அறிவேன். [QBR]
19 என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? [QBR] நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. [QBR]
20 இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; [QBR] அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். [QBR]
21 உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; [QBR] உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. [QBR]
22 நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; [QBR] அல்லது நான் பேசுவேன்; [QBR] நீர் எனக்கு மறுமொழி சொல்லும். [QBR]
23 என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? [QBR] என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். [QBR]
24 நீர் உமது முகத்தை மறைத்து, [QBR] என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? [QBR]
25 காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? [QBR] காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? [QBR]
26 மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; [QBR] என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். [QBR]
27 என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, [QBR] என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; [QBR] என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர். [QBR]
28 இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், [QBR] பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான். [PE]
×

Alert

×