Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 12 Verses

1 {யோபுவின் வார்த்தைகள்} [PS] யோபு மறுமொழியாக: [QBR]
2 “ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; [QBR] உங்களுடனே ஞானம் சாகும். [QBR]
3 உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; [QBR] உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; [QBR] இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? [QBR]
4 என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, [QBR] தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; [QBR] உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். [QBR]
5 ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; [QBR] கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். [QBR]
6 திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; [QBR] தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; [QBR] அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். [QBR]
7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், [QBR] அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், [QBR] அவைகள் உனக்கு அறிவிக்கும். [QBR]
8 அல்லது பூமியை விசாரித்துக் கேள், [QBR] அது உனக்குப் போதிக்கும்; [QBR] சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். [QBR]
9 யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? [QBR]
10 எல்லா உயிரினங்களின் உயிரும், [QBR] மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. [QBR]
11 வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, [QBR] காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா? [QBR]
12 முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. [QBR]
13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? [QBR] அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. [QBR]
14 இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; [QBR] அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. [QBR]
15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; [QBR] அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும். [QBR]
16 அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; [QBR] மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், [QBR] அவர் கையின் கீழிருக்கிறார்கள். [QBR]
17 அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, [QBR] நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார். [QBR]
18 அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, [QBR] அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். [QBR]
19 அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், [QBR] பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். [QBR]
20 அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, [QBR] முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார். [QBR]
21 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; [QBR] பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். [QBR]
22 அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, [QBR] மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். [QBR]
23 அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; [QBR] அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். [QBR]
24 அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, [QBR] அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். [QBR]
25 அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; [QBR] வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார். [PE]
×

Alert

×