Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 10 Verses

1 என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, [QBR] நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, [QBR] என் மனவேதனையினாலே பேசுவேன். [QBR]
2 நான் தேவனை நோக்கி: [QBR] என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; [QBR] நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். [QBR]
3 நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, [QBR] துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? [QBR]
4 சரீரக்கண்கள் உமக்கு உண்டோ? [QBR] மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ? [QBR]
5 நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து, [QBR] என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, [QBR]
6 உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், [QBR] உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ? [QBR]
7 நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; [QBR] உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை. [QBR]
8 உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், [QBR] என்னை அழிக்கிறீர். [QBR]
9 களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், [QBR] என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும். [QBR]
10 நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ? [QBR]
11 தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர். [QBR]
12 எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; [QBR] உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது. [QBR]
13 இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், [QBR] இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். [QBR]
14 நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, [QBR] என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். [QBR]
15 நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, [QBR] நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; [QBR] அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; [QBR] நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. [QBR]
16 சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, [QBR] எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர். [QBR]
17 நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்; [QBR] என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கச் செய்கிறீர்; [QBR] போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது. [QBR]
18 நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன? [QBR] ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே. [QBR]
19 நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல், [QBR] கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன். [QBR]
20 என் நாட்கள் கொஞ்சமல்லவோ? [QBR]
21 காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், [QBR] இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே, [QBR]
22 நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான். [PE]
×

Alert

×