பின்பு ஏழாம் மாதத்தில் ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிஷாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடன் ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஒன்றாக உணவு சாப்பிட்டார்கள்.
அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து: எங்களைக் கொலைசெய்யவேண்டாம்; கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரர்களைக் கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
அவர்கள் ஆண்களையெல்லாம் அழைத்துக்கொண்டு, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோடு போர்செய்யப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீர் அருகில் கண்டார்கள்.