Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 37 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 37 Verses

1 {எருசலேமின் விடுதலை முன்னறிவிக்கப்படுதல்} [PS] ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல்உடை அணிந்துகொண்டு, யெகோவாவுடைய ஆலயத்திற்குச் சென்று,
2 அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல்உடை அணிந்தவர்களாக அனுப்பினான்.
3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், துக்கமும், நிந்தையும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.
4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் எஜமானனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளின்காரணமாக தண்டிப்பார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
5 இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னை நிந்தித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
7 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான்.
9 அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பி:
10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே.
11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
12 என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவர்களுடைய தெய்வங்கள் தப்புவித்ததுண்டோ?
13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். [PS]
14 {எசேக்கியாவின் ஜெபம்} [PS] எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய் அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து,
15 யெகோவாவை நோக்கி:
16 சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
17 யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.
18 யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி,
19 அவர்களுடைய தெய்வங்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை முற்றிலுமாக அழித்தார்கள்.
20 இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே யெகோவா என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் செய்தான். [PS]
21 {சனகெரிப்பின் வீழ்ச்சி} [PS] அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்செய்தாயே.
22 அவனைக்குறித்துக் யெகோவா சொல்கிற வசனமாவது: மகளாகிய சீயோன் என்னும் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; மகளாகிய எருசலேம் உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
23 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்.
24 உன் ஊழியக்காரர்களைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், விலையுயர்ந்த தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,
25 நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்செய்தேன் என்றும் சொன்னாய்.
26 நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, ஆரம்பநாட்கள்முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.
27 அதினாலே அவைகளின் குடிமக்கள் கை இளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் தாவரத்திற்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.
28 உன் உட்காருதலையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
29 நீ எனக்கு விரோதமாகத் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பச்செய்வேன்.
30 உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.
31 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
32 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும்.
33 ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் நுழைவதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கோட்டைமதில் போடுவதுமில்லை.
34 அவன் இந்த நகரத்திற்குள் நுழையாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
35 என்னிமித்தமும் என் வேலைக்காரனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை காப்பாற்றுவதற்காக இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
36 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் முகாமில் ஒரு இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரை அழித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லோரும் சடலங்களாகக் கிடந்தார்கள்.
37 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.
38 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் மகன்களாகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான். [PE]

Isaiah 37:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×