{எசேக்கியேலின் அழைப்பு} [PS] அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே [* இந்த புத்தகத்தில் தேவன் எசேக்கியேலை மனிதகுமாரனே என்று சொல்லுவதற்கு காரணம் மனிதன் மரணமடையாமல் நித்தியமாக வாழ்பவன் இல்லை என்பதை சுட்டிகாட்டத்தான்] , உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள்.
அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல்.
மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள்.
மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார்.