Indian Language Bible Word Collections
Ecclesiastes 12:21
Ecclesiastes Chapters
Ecclesiastes 12 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Ecclesiastes Chapters
Ecclesiastes 12 Verses
1
நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்.,
2
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும்,
3
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதால் ஓய்ந்து, ஜன்னல் வழியாகப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,
4
எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும்,
5
மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
6
வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,
7
இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.
8
மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
9
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
10
இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
11
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
12
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
13
காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.
14
ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.