சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு , தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது.
இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.