உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.
ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள். எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள். அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள். அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள். இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள். ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.
யார் இந்த இளம் பெண்? விடியலின் வானம் போல் பிரகாசிக்கிறாள். நிலவைப் போல் அழகாக இருக்கிறாள். சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள். வானத்தில் உள்ள படைகளைப்போல் கம்பீரமாக விளங்குகிறாள்.
திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா, திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்? அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள்.