Indian Language Bible Word Collections
Psalms 6:3
Psalms Chapters
Psalms 6 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 6 Verses
1
கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன.
3
என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4
கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5
கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். எனவே என்னை நீர் குணமாக்கும்!
6
கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7
எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8
தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10
எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.