பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய். நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
"தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள். அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்" என்பார்கள்.
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன். நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன். ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.