Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Malachi Chapters

Malachi 4 Verses

Bible Versions

Books

Malachi Chapters

Malachi 4 Verses

1 "நியாயத்தீர்ப்புக்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வெப்பமான சூளைபோன்றது. தற்பெருமையுடைய ஜனங்கள் எல்லாம் தண்டிக்கப்படுவார்கள். தீயவர்கள் எல்லோரும் வைக்கோலைப்போல் எரிக்கப்படுவார்கள். அந்தக் காலத்தில், அவர்கள் நெருப்பில் எரிகிற பதரைப் போன்றிருப்பார்கள். அதிலுள்ள கிளையே வேரோ விடுபடாமல்போகும்" என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
2 "ஆனால், என்னைப் பின்பற்றுகிறவர்களே, உங்களுக்கு நன்மையானது உதய சூரியனைப் போன்று ஒளி வீசும். இது சூரியக்கதிர்களைப் போன்று குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு வரும். நீங்கள் தொழுவத்திலிருந்து விடுபட்டகன்று குட்டிகளைப் போன்று சுதந்திரமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள்.
3 பின்னர் அத்தீய ஜனங்கள் மேல் நடந்து செல்வீர்கள். அவர்கள் உங்கள் காலடியில் சாம்பலைப்போன்று கிடப்பார்கள். நியாயத்தீர்ப்புக்கான காலத்தில் நான் அவற்றை நிகழும்படிச் செய்வேன்." சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்!
4 "மோசேயின் சட்டங்களை நினைவு கொண்டு கீழ்ப்படியுங்கள். மோசே எனது ஊழியகாரனாக இருந்தான். நான் அவனுக்கு ஒரேப் மலையிலே (சீனாய்) அந்த சட்டங்களை கொடுத்தேன். அந்தச் சட்டங்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்கும் உரியது."
5 கர்த்தர், "பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான்.
6 [This verse may not be a part of this translation]

Malachi 4:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×